Islamic History Islamic Knowledge Knowledge

ஆத்திகா பின்த் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹா) சுவனத்துக் குடும்பங்களால் சூழப்பட்ட பெண்!

ஆத்திகா பின்த் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹா)

சுவனத்துக் குடும்பங்களால் சூழப்பட்ட

பெண்!

 

ஸைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைல் அரேபியர்களில் முற்றிலும் வித்தியாங்மான ஓர் ஆளுமை. அவர் தெளிவான சிந்தனையும் இரக்க சீபாவமும் ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கையும் கொண்டிருந்தவர். உயிருடன் புதைக்கப்பட இருந்த பல

குழந்தைகளைப் பாதுகாத்தவர். குறை ஷிகளின் ஙெ்யல்களை விமர்சித்துக் கொண்டிருந்த அவர், மக்கள் அனைவரும் சிலைகளை வணங்கும்போது அல்லாஹ் ஒருவனை மாத்திரமே வணங்கி வந்தார். அவரது இந்த சிறப்புக்களை விவரிக்கும் ஒரு ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களால் அறிவிக்கப்பட்டு ஸஹீஹுல் புகாரியில் பதிவு ஙெ்ய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் தோழர்கள் நுஃபைல் ஸைத் இப்னு அம்ருக்கு பாவ மன்னிப்புக் கோரலாமா?” என்று கேட்டபோது நபிகளார் ஆம்! அவர் மறுமை

யில் ஒரு தனி ங்முதாயமாக எழுப்பப்படு வார்” என்று கூறினார்கள். (அஹ்மத்) அத்தகையதொரு மனிதப் புனிதரின் புதல்விதான் ஆத்திகா பின்த் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களாவார். ஸைத் இப்னு அம்ரின் ஆண் பிள்ளை சீவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட பத்து நபர்களில் ஒருவரான ஸஈத் இப்னு ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) என்பவராவார். சிறந்த குடும்

பத் தலைவரான அவர், சிறந்த ங்ந்ததிக ளுக்கு வித்திட்டு ஙெ்ன்றார்.

ஆத்திகாவின் தாயார் உம்மு குறைஸ் பின்த் அல் ஹழ்ரமீ ஆவார். அவரது சிற் றன்னை சீவர்க்கத்தைக் கொண்டு நற் ஙெ்ய்தி ங்ோல்லப்பட்ட பத்துப் பேரில் ஒருவரான தல்ஹா இப்னு உபைதுல் லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தாயாரான ஸஆபா பின்த் அல்ஹ ழிரமீ ஆவார். சிறந்த குடும்பப் பின்னணியிலிருந்து உருவான ஆத்திகா (ரழியல்லாஹு அன் ஹா) முழுமையான அழகு, இறையச்ங்ம், நற்குணம், புத்திக்கூர்மை ஆகிய சிறப்பம்ங்ங்களைக் கொண்டவராகவும் குறைஷிப் பெண்களில் மிகத் தெளிவா

கவும் நாவன்மையுடனும் பேங்க் கூடிய ஒருவராகவும் திகழ்ந்துள்ளார். ஆரம்பகாலத்தில் இஸ்லாத்தை ஏற்று மதீனா வுக்கு ஹிஜ்ரத் ஙெ்ய்தவர். மக்கா வாழ் வின் ஆரம்பத்திலேயே இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இறை நம்பிக்கையில் முழுமை பெற்றவர்களாகவும் இலட்சி யத்தில் குறிவைத்தவர்களாகவும் துயரங்களின்போது நிலைகுலையா தவர்களாகவும் தேவைப்படும்போது

அர்ப்பணிப்பவர்களாகவும் இருந்துள்ளார் கள். ஆத்திகா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுடன் ங்ம்பந்தப்படும் மனிதர்

களும் அவரது கணவர்களும் அத்தகை யவர்களே!

ஆத்திகாவின் முதல் கணவர் அண்ண லாரின் மிக நெருங்கிய தோழர் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மகன் அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்.

அபூ நுஐம் (ரஹிமஹுல்லாஹ்) அறிவிக்கிறார்கள்: ஆத்திகா மிக அழகுள் ளவராக இருந்தார். அப்துல்லாஹ் இப்னு அபீபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அதனால் கவரப்பட்டார். அது அவரை ஒரு யுத்தத்தில் கலந்து கொள்வதை விட்டும் பராக்காக்கி விட்டது. எனவே, அபூபக்கர் (ராழியல்லாஹு அன்ஹு) அவரை விவாகரத்து ஙெ்ய்யும்படி தன் மகனுக்கு கட்டளையிட்டார். தந்தை அவ்விடயத்தில் கட்டாயப்படுத்தியதால் அவர் விவாகரத்து ஙெ்ய்தார். எனினும்,

அவரது உள்ளம் ஆத்திகாவைப் பின்தொடர்ந்தது. ஒருநாள் இன்று இத்தகையவர்களை என் போன்றவர்கள் விவாகரத்து ஙெ்ய்ததை நான் பார்க்கவில்லை. இவர்களைப் போன்றவர் கள் எக்குற்றமுமின்றி விவாகரத்துஙெ்ய் யப்படுவதையும் நான் பார்க்கவில்லை” என்ற கவி வரிகளைப் பாடினார். அதனை அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) கேட்

டபோது மகன் மீது அனுதாபம் கொண்டு மீண்டும் மணமுடிக்க அனுமதி வழங்கி னார். அப்துல்லாஹ் ஆத்திகாவை மீட்டி எடுத்துக் கொண்டார். தாயிஃப் முற்றுகையின்போது அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை ஓர் அம்பு தாக்கி

அதன் காரணமாக மதீனாவில் மரணம டைந்தார்கள்.         (அல்இஸாபா) பற்றற்ற வாழ்வுக்கும் ஆன்மிகப் பயிற்சிக்கும் உட்பட்டு தான் புடம்போ டப்பட ஆத்திகாவின் வாழ்வில் மற்றோர்

அரிய ங்ந்தர்ப்பம் கிட்டுகிறது. சீவர்க்கத் தைக் கொண்டு நற்ஙெ்ய்தி பகரப்பட்ட இரண்டாவது நபர் உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆத் திகாவை மணமுடிக்க முன்வந்தார்.

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர் களின் ஆளுமையை நன்கு அறிந்திருந்த ஆத்திகா (ரழியல்லாஹு அன்ஹா), திருமணப் பேச்சீவார்த்தையின்போது தனக்கு அடிக்கக் கூடாதென்றும், உரிமையில் எதையும் தடுக்கக் கூடாதென்றும், மஸ்ஜிதுன் நபவிக்கு தொழுகைக்காக ஙெ்ல்வதை நிறுத்தக் கூடாதென்றும் நிபந்தனையிட்டுக் கொண்டார்.                               (தம்ஹீத் – அபூ உமர்) ஆத்திகாவின் இந்த வார்த்தைகள் இஸ்லாத்திற்கு முன்பி ருந்த அரேபியாவின் சுழலை இஸ்லாம் தலைகீழாக மாற்றிய மைத்தது என்பதற்கான ங்ான்றாகும். ஒரு முஸ்லிம் பெண் இஸ்லாமியக் குடியரசீத் தலைவருக்கு முன்னால்கூட நிமிர்ந்து நின்று தன் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியு மாக இருந்தது. மூஸா இப்னு உக்பா (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடுகிறார்: ஆத்திகா (ரழியல்லாஹு அன்ஹா) மஸ்ஜிதுந் நபவிக்கு அதிகமா கப் போய் வருபவராக இருந்தார். உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அதை விரும்பவில்லை. அது பற்றி ஆத்திகாவிடம் கூறப்பட் டது. உமர் என்னைத் தடுத்தாலேயன்றி நான் அதை விடப்போவதில்லை” என்று அவர் கூறி விட்டார். உமர் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்களும் தடுக்க விரும்பாதவர் போன்று இருந்து விட்டார். (அல் இஸாபா)உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இஸ்லாத்தின் எதிரி ஒருவனால் ஷஹீதாக்கப்பட்ட பின்னரும் கூட சீவனத் தின் ங்ோந்தங்களைத் துணைவர்களாகக் கொள்ளும் தொடர்பு ஆத்திகாவின் விடயத்தில் அறுபட்டுப் போகவில்லை.

அண்ணலாரின் நேங்த்திற்குரிய தோழரும் போராளியும் குதிரை வீரரும் சீவர்க்கம் கொண்டு சீபங்ோபனம் ங்ோல்லப் பட்ட பத்து நபர்களுள் மற்றொருவருமான ஸுபைர் இப்னு அல் அவ்வாம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆத்திகாவை

மணமுடித்தார்கள். அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: ஒருமுறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹிரா மலை மீது இருந்தபோது மலை அங்நை்தது. அப்போது

நபியவர்கள் ஹிராவே! அமைதியாக இரு! உன் மீது ஒரு நபியும் ஒரு ஸித்தீக்கும் ஷஹீதுகளுமே இருக்கின்றனர்” என்று ங்ோன்னார்கள். அப்போது அம்மலை மீது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அபூபக்ர், உமர், தல்ஹா, ஸுபைர், ஸஅத்

இப்னு அபீவக்காஸ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் இருந்தனர். (ஸஹீஹ் முஸ்லிம்) ஸுபைர் (ரழியல்லாஹு அன்ஹு) பஸராவுக்கு அண்மை யிலுள்ள ‘வாதி ஸிஃபா’ என்ற இடத்தில் யுத்தத்தை விட் டுத் திரும்பி வரும்போது ஷஹீதாக்கப்பட்டார். ஸுபைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொலை ஙெ்ய்த இப்னு ஜுர்மூஸ் என்பவன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் அனுமதி வேண்டினான். அப்போது அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸுபைரைக் கொலை ஙெ்ய்தவன் நரக நெருப்பில் நுழைவான். அவனுக்கு அனுமதி வழங்குங்கள். நிச்ங்யமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ங்ோல்ல நான் ஙெ்விமடுத்துள்ளேன்; ‘ஒவ்வொரு நபிக்கும் சிரேஷ்ட உதவியாளர் இருக்கிறார். எனக்குரிய சிரேஷ்ட உதவியாளர் ஸுபைர் ஆவார்.” (அல் ஹாகிம் – ஸஹீஹ்)

அழகுமிக்க ஆத்திகா (ரழியல்லாஹு அன்ஹா) ஒருவர் பின் ஒருவராக தனக்கு மிகச் சிறந்த கணவர்களையே அங்கீ கரித்தார். அவர்கள் மூவரும் இஸ்லாத்திற்காக தங்களது இன்னுயிரை நீத்த ஷுஹதாக்கள். இஸ்லாம் வாழ்வதற்காக உயிர் நீத்த உத்தமர்கள் அவர்கள். ஆத்திகா (ரழியல்லாஹு அன்ஹா) ஹிஜ்ரி 41 ஆம் ஆண்டு முஆவியா இப்னு அபீஸுப்யான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் அந்த உத்தமர்களோடு போய் இணைந்து விட்டார். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) யார் வீர மரணத்தை அடைய விரும்புகிறாரோ அவர் ஆத்திகா பின்த் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை மணமுடிக் கட்டும்” என்று கூறுவார். திருமண முன்னெடுப்புக்களின்போது எத்தகைய துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு சிறந்த வழிகாட்டலை ஆத்திகா (ரழியல்லாஹு அன்ஹா) தந்து விட்டு மறைந்தார். இன்று அந்த அளவுக்கு இல்லையெனினும், இஸ்லாத்தின் எழுச்சிக்காக உழைக்கின்ற ஓர் ஊழியனையா வது அடைந்து கொள்ள முஸ்லிம் பெண்கள் முயற்சிக்க வேண்டும். தூய்மையான பெண்கள் தூய்மையான ஆண்க ளுக்கும், தூய்மையான ஆண்கள் தூய்மையான பெண்களுக்கும் உரியவர்களாவர்” (24:26) என்கிறது வான்மறை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *