Ibadah Spiritual Upliftment

கண்ணியமிக்க லைலதுல் கத்ர் இரவும் இஸ்திஃபாரும்

கண்ணியமிக்க லைலதுல் கத்ர் இரவும் இஸ்திஃபாரும்

 

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதரே! கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவு இத்தனையாம் இரவுதான் என நான் அறிந்து கொண்டால் அவ்விரவில் நான் என்ன கூறவேண்டும்?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அபுவ்வுன் துஹிப்புல் அப்வ பஃபு அன்னீ” (யா அல்லாஹ்! நீ மன்னிக்கும் பரம தயாளன். நீ மன்னிப்புக் கோருவதை விரும்புகின்றாய். எனவே, நீ என்னை மன்னித்தருள்புரிவாயாக!) எனக் கூறுவாயாக!” என பதிலளித்தார்கள். (திர்மிதி)

ரமழான் என்னும் பயிற்சிப் பாங்றையின் இறுதிப் பத்து நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்நாட்களில் லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க ஓர் இரவு) மறைந்திருக்கின்றது. இது ஆயிரம் மாதங்களைவிட சிறப்புற்ற ஓர் இரவாகும். இதில் வானவர்கோன் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் அவர் தம் பரிவாரங்களாகிய வானவர்களும் இறங்குகின்றனர். இறைவனது அருங்கடாட்ங்ங்களும் அவனது பாவமன்னிப்பும் நிரம்பி வழிகின்ற அந்த பாக்கியமிக்க இரவை அடைந்து தன்னை முழுமையாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் அதிர்ஷ்டங்ாலியேதான்!

ரமழானின் இறுதிப் பத்து நாட்களிலேயே உச்ங் கட்ட பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நாட்களில் இஃதிகாப் (பள்ளிவாயலில் தரிப்பது) ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் தனி மனிதன் இந் நாட்களில் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நாட்களில் அவன் தனது உள்ளத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தனது சிந்தனைகளையும் எண்ணங்களையும் அல்லாஹ் என்ற மையப் புள்ளியை நோக்கி குவிக்க வேண்டும். தனது அடைவு மட்டம் மஃபிரா என்னும் இறைவனது பாவமன்னிப்பை மறுமையில் ங்ன்மானமாகப் பெறுவதாக அமைய வேண்டும். இதனை அல்குர்ஆன் அழுத்திப் பேசியுள்ளது.

மேலும், நீங்கள் உங்களது இரட்ங்கனின் பாவமன்னிப்பை நோக்கியும் வானவர்கள் புமியைப் போல அகல விரிந்திருக்கும் சீவனத்தை நோக்கியும் விரைந்து வாருங்கள். அந்த சீவனம் இறையச்ங்முள்ளோருக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.” (ஸூரா ஆலு இம்ரான்: 133)

தூய தேங்மும் மன்னிக்கும் இரட்ங்கனும்” (ஸூரா ஸபஉ: 15)

மனிதனது இதயவறைகளிலிருந்து அசீத்த இரத்தம் வெளியேற்றப்பட்டு புதிய இரத்தம் பாய்ச்ங்ப்படுகிறது. இதனால் அவன் ஆரோக்கியமாக வாழ முடிகிறது. ஆனால், இதயத்தில் படிந்துள்ள பாவக் கறைகள் சீத்திகரிக்கப்படுகிறதா? புதிய ஈமானிய உற்ங்ாக இரத்தம் பாய்ச்ங்ப்படுகிறதா? மனிதன் உள ஆரோக்கியத்துடன் வாழ முடிகிறதா? இதயத்தில் பாவக்கறை படிந்து விட்டால் அதனை அகற்ற அல்லாஹ் நமக்களித்த சீத்திகரிப்பு ங்ாதனங்களில் ஒன்றே தௌபா, இஸ்திஃபார் ஆகும். இரத்தத்தில் கொழுப்புப் படிந்து அது மாரடைப்புக்கு வழி வகுத்து உயிராபத்தை ஏற்படுத்தும் என்ற மருத்துவ நிபுணர்களின் எச்ங்ரிக்கைக்குப் பயந்து நாம் முன்னெடுக்கும் மருத்துவ ரீதியான முன்னெச்ங்ரிக்கை நடவடிக்கைகள் தான் எத்தனை? ஆனால் ஈமானிய மயிர்த்துளைக் குழாய்களில் படிந்து வரும் பாவத் துகள்களை அகற்றுவதற்கு நாம் என்ன ஙெ்ய்கிறோம்?

அல்லாஹ் இந்த உம்மத்தின் முன்னே பாவமன்னிப்பு என்னும் வாயிலை அகலத் திறந்து வைத்துள்ளான். அந்த வாயிலினூடே உட்புகுந்து இஸ்லாத்திற்குள் வந்து ஈமானைப் புதிப்பித்துக் கொள்ளுங்கள் என வல்ல ரப்பு அறைகூவல் விடுகின்றான். அந்த அறைகூவல் ரமழானில் தூதர் மொழிகள் மூலம் இவ்வாறு முன்வைக்கப்படுகின்றன:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ரமழானில் ஆழ்ந்த நம்பிக்கை, விசுவாசம் கொண்ட நிலையில் மேலும் அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்த நிலையில், நோன்பு நோற்றவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.” (ஸஹீஹுல் புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ரமழானில் ஆழ்ந்த நம்பிக்கை, விசுவாசம் கொண்ட நிலையில் ‘மேலும் அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்த நிலையில் நின்று, வணங்கியவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.” (ஸஹீஹுல் புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ரமழானில் ஆழ்ந்த நம்பிக்கை விசுவாசம் கொண்ட நிலையில், மேலும் அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்த நிலையில் கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் நின்று வணங்கியவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.” (ஸஹீஹுல் புகாரி, முஸ்லிம்)

ரமழானில் ஒரு முஸ்லிம் தனி மனிதன் பாவங்களைச் சுட்டெரிக்கின்ற வகையில் அவனது நோன்பும் இராக் கால வணக்க வழிபாடுகளும் அமைய வேண்டும் என்பது மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்கள் மூலம் தெளிவாகின்றது. அவ்வாறே மன்றாட்டம், இறைஞ்சுதல் மூலமும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பது இறைதூதரின் எதிர்பார்க்கையாகும். எனவேதான், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு பாவ மன்னிப்புக் கோருவதற்கான வார்த்தைப் பிரயோகங்களை நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸில் தெளிவுபடுத்துகின்றார்கள்.

இறைவனை பிரார்த்தனையின் ஊடாக நெருங்குவதற்கு முயற்சிக்கின்ற ஒருவர் முதன்மையாக அவனது திருநாமங்களையும் பண்புகளையும் உளப்பூர்வமாக வாய் நிரம்ப மொழிய வேண்டும். இதனையே அல்லாஹும்ம இன்னக அபுவ்வுன்” என்ற பிரயோகம் குறிக்கின்றது. பிரார்த்தனை புரிகின்ற ஒருவர், அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் அவனுடைய பண்புகளை நாவால் மொழிந்து அதனை வஸீலா என்னும் இடைச் சாதனமாகப் பயன்படுத்துவது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட உதவியாக அமையும்.

நபிமார்கள்கூட தங்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களை நீக்குமாறு இறைவனிடத்தில் இறைஞ்சியபோது அல்லது பாவமன்னிப்புக் கோரியபோது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை வஸீலாவாகப் பயன்படுத்தினர். நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்:

என்னுடைய இறைவனே! என்னை மன்னிப்பாயாக! எனக்குப் பின்னர் யாருக்கும் வழங்காத அரசாட்சியை எனக்கு வழங்குவாயாக! நிச்சயமாக, நீ வாரி வாரி வழங்குகின்றவன்.” (ஸூரா ஸாத்: 35)

ஐயூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனக்கு ஏற்பட்ட தீங்கை நீக்குமாறு பின்வருமாறு பிரார்த்தித்ததாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது:

ஐயூப் (அலைஹிஸ்ஸலாம்) தனது இறைவனைப் பிரார்த்தித்து அழைத்து எனக்கு தீங்கு ஏற்பட்டுள்ளது. (அதனை நீ அகற்றி விடுவாயாக!) நீ கருணையாளர்களுக்கெல்லாம் மிகவும் உயர்ந்த கருணையாளன்.” (ஸூரதுல் அன்பியா: 83)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் கூட அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு வஸீலா தேடுவதின் ஒழுங்கைக் கற்றுக் கொடுக்கும் வகையில் அல்லாஹும்ம இன்னக அபுவ்வுன்…” என்ற  வாங்கத்தை அறிமுகம் ஙெ்ய்து வைத்தார்கள். அல்குர்ஆனில் ‘அபுவ்வுன்’ என்ற பதம் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளது. நிச்ங்யமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். பிழைகளை பொறுப்பவனாக இருக்கின்றான்” (ஸூரா அல் ஹக்: 60) கண்ணியமிக்க இரவாகிய லைலதுல் கத்ரில் ஓதுவதற்கு பல நூறு திக்ருகள் இருக்க நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு பாவமன்னிப்பு கோரும் வார்த்தைகளை ஏன் கற்றுக் கொடுத்தார்கள்?ஒரு மாத காலம் ரமழான் என்னும் பயிற்சிப் பாங்றையில் பயிற்றுவிக்கப்பட்ட முஸ்லிம்கள் பயிற்சியை நிறைவு ஙெ்ய்யும் இறுதிக் கட்டத்தில் பயிற்சியின்போது தங்களால் விடுபட்ட தவறுகளுக்காக பாவமன்னிப்புக் கோரி மனிதப் புனிதர்களாக இந்தப் பயிற்சி நெறியை நிறைவு ஙெ்ய்ய வேண்டும் என்பது இறைதூதரின் வேணவாவாகும். இதன் காரணமாகவே நபிகளார் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு இதனைக் கற்றுக் கொடுத்தார்கள்.

ரமழானுக்கு முன்னுள்ள மாதங்களிலும் முஸ்லிம் பாவம் ஙெ்ய்யும் இயல்புடையவனாகவே இருந்தான். அவனது பாவம் பெரும்பாவமாக அமைந்திருக்க முடியும். சிலபோது அந்தப் பாவத்திற்கு இறைவனால் உலகில் தண்டனை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அந்தத் தண்டனை வழங்கப்படுவதற்கான இஸ்லாமிய அரசீம் அரங்ாங்கமும் இல்லாத நிலையில் அவன் குறித்த தண்டனையிலிருந்து தப்பித்து வாழ்ந்திருக்க முடியும். ஆனாலும் இவன் பாவிதான். இவன் இந்தப் பாவத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சீத்தமாக வாழ்வதற்கு வழி என்ன?

வேறு சிலர் பெரும்பாவங்களில் நேரடியாக ஈடுபடாமல் அவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு தாங்கள் பாவம் ஙெ்ய்யவில்லை” என்று நப்பாங்யைில் வாழ்வர். உதாரணமாக விபச்ங்ாரம் புரிந்தால் பாவம், நாங்கள் அவ்வாறு பாவத்தில் ஈடுபடவில்லையே! எனக் கருதிக் கொண்டு தொலைக்காட்சி தொலைபேசி ங்மூக வலைதளங்கள் மூலம் விபங்ாரத்திற்கு வழிவகுக்கக் கூடிய படுமோங்மான படங்களைப் பார்த்துக் கொண்டும் பாடல்களைக் கேட்டுக் கொண்டும் அந்நியப் பெண்ணுடன் ஒரு ஆணும் ஒரு அந்நிய ஆணுடன் ஒரு பெண்ணும் உரையாடிக் கொண்டும் கால நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருப்பர். இவர்களும் பாவிகளே! இவர்களும் கட்டாயம் ரமழானில் தங்களது பாவங்களுக்கான பரிகாரத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.

மக்களின் வாக்குப் பலத்தால் மக்கள் பிரதிநிதிகளாக மாறி தங்களது பதவிகளை அமானிதமாகக் கருதாமல் மோங்டி ஙெ்ய்து வாழுபவர்களும் பாவமே ஙெ்ய்கின்றார்கள். ஊழல், இலஞ்ங்ம், துஷ்பிரயோகம் முதலான பாவங்களுக்கு பொறுப்புதாரர்களும் மக்கள் பிரதிநிதிகளும் இறைவனிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இதற்கான அரிய ங்ந்தர்ப்பமே கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவாகும்.

பொதுவாக பாவமன்னிப்பு என்பது பெரும் பாவிகளுடனேயே தொடர்புபடுத்திப் பேங்ப்படுவதுண்டு. ஆனாலும் பாவன்னிப்பு, நல்லோர்கள், மார்க்கப் பற்றாளர்கள், அழைப்பாளர்கள், உலமாக்கள்  உள்ளிட்ட  அனைவருக்கும்  உரித்தான கடமையாகும். நல்லோர்கள் பகிரங்கமாக பாவம் ஙெ்ய்வதில்லை. ஆனாலும், அவர்களுடன் ஷைத்தான் விளையாடி அவர்களது ஆன்மாக்களுக்கு அநியாயமிழைக்க வைத்து அவர்களை அவன் பாவிகளாக மாற்ற முடியும். இதனை அல்குர்ஆன் ‘லுழ்முந் நப்ஸ்’ ஆன்மாவுக்கு அநியாயமிழைத்தல் என்று அடையாளப்படுத்துகிறது. அன்றி அவர்கள் ஒரு மானக் கேடான காரியத்தை ஙெ்ய்து விட்டாலும் அல்லது தங்களது ஆன்மாவுக்கு அநியாயமிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைவுகூர்ந்து (அவனிடம்) பாவமன்னிப்பைத் தேடுவார்கள்.” (ஸூரா ஆலுஇம்ரான்: 135)

இக்காலப் பிரிவில் அழைப்பின் நிலத்தில் நின்றுழைப்பவர்கள்கூட பாவம் ஙெ்ய்ய முடியும். அந்தப் பாவத்தின் இயல்புத் தன்மை ஏனைய பாவங்களைவிட வித்தியாங்மானது. முகஸ்துதி, தற்பெருமை, நான் என்ற அகங்காரம், குரோதம், காழ்ப்புணர்வு, பகைமை, பழிதீர்க்கும் மனப்பான்மை, முஸ்லிம் ங்மூகத்தை முஷ்ரிகான ங்மூகமாகப் பார்த்தல், அதற்கு எதிராகப் பத்வா வழங்குதல், வெறித்தனமான மத்ஹப் பின்பற்றுகை, மத்ஹப் எதிர்ப்பு வாதம், ஒரு முஸ்லிமின் ஆளுமையைக் காயப்படுத்தி காட்டமாக விமர்சித்தல், ங்முதாயத்தை மார்க்கத்தின் பெயரால் பிளவு படுத்தல் முதலான இன்னோரன்ன பாவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் ரமழானில் பாவமன்னிப்புக் கோரியே ஆக வேண்டும்.

இங்கு, இந்த நவீன நூற்றாண்டின் பேரறிஞர், இஸ்லாமிய சிந்தனையாளர், இஸ்லாமிய அழைப்பாளர் முஹம்மத் அல் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் உரையாடல் ஒன்றை பதிவு ஙெ்ய்வது பொருத்தமானது என நான் கருதுகின்றேன். ஷெய்க் அல் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஒரு தடவை குடிப் பழக்கத்திற்கு அடிமையான ஒருவரை பார்த்து நீ தௌபா ஙெ்ய்யக் கூடாதா?” என்று கேட்டேன். அவன் குற்ற உணர்வோடு என்னைப் பார்த்தான். கண்கள் பனித்திருந்தன. எனக்காகப் பிரார்த்தியுங்கள்” என்றான்.

அவனது நிலையைப் பார்த்து எனது மனம் வருந்தியது. அல்லாஹ்வின் விடயத்தில் தவறு ஙெ்ய்து விட்டதற்கான உணர்வுதான் அந்தக் கண்ணீர். திருந்த வேண்டும் என்ற நிலை அவரில் தெரிந்தது. உண்மையில் அவர் ஒரு விசீவாசி. என்றாலும் ங்ோதிக்கப்பட்டவர். அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு என்னிடமும் வேண்டுகிறார். அப்போது நான் எனக்குள்ளேயே பேசிக் கொண்டேன்! எனது நிலையும் இவரது நிலையைப் போன்றுதான் அல்லது அதனை விடவும் மோங்மானது. நான் மது அருந்தியது கிடையாது. நான் வாழ்ந்த சுழலும் அப்படியானதல்ல. என்றாலும், பொடுபோக்கு என்ற மதுவை அருந்தியிருக்கிறேன். அல்லாஹ்வை அதிகம் மறந்து அவனது கடமைகளில் தவறியிருக்கிறேன். இவர் தான் விட்ட குறைக்காக அழுகிறார். நானும் என்னைப் போன்றோரும் நாம் விடும் குறைக்காக அழுது கிடையாது. நாம் எம்மைமைப் பார்த்தே ஏமாந்து விட்டோம்.

குடிப்பழக்கத்தை விடுவதற்கு பிரார்த்திக்குமாறு என்னிடம் வேண்டிய அந்த ங்கோதரனை நோக்கி நான் நெருங்கினேன். வாருங்கள் நாம் பரஸ்பரம் பிரார்த்திப்போம்” என்று கூறினேன். இறைவா! நாம் எமக்கே அநியாயம் ஙெ்ய்து விட்டோம். நீ எம்மை மன்னிக்காவிட்டால் கருணைக் காட்டா விட்டால் நாம் நஷ்டவாளிகளே!” (ஸூரா அல்அஃராப்: 23)

ரமழான் மாதத்தில் மிகவும் பெறுமதியான நாட்கள் இறுதிப் பத்தாகும். இந்த நாட்களில் கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவை அடைந்தவனை விட மிகப் பெரிய அதிர்ஷ்டங்ாலி யார் இருக்க முடியும்? இந்தப் பயிற்சிப் பாங்றையில் பயின்ற முஸ்லிம்கள் இறுதிக் கட்டத்தில் கடுமையான பயிற்சிகளினூடாக கங்க்கிப் பிழியப்பட்டு பரிசீத்தப்படுகின்றார்கள். இதன்போது அவர்களின் அதரங்கள் உதிரும் பிரார்த்தனை வடிவமே அல்லாஹ்வே! நீயே மன்னிக்கும் பரம தயாளன்! நீ பாவ விமோங்னத்தை நேசிக்கின்றாய்! எனவே, என்னை மன்னித்து விடு!”

இந்த துஆப் பிரார்த்தனையை முதலாவதாக நபிகளார், ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அப்படி என்ன பாவம் ஙெ்ய்தார்கள்? ஒரு ங்ராங்ரி மனிதன் புரிகின்ற பாவ காரியங்களை அவர்கள் நிச்ங்யமாக ஙெ்ய்திருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அன்பு மனைவி. முஃமின்களின் தாய் ‘தாஹிரா’ (தூய்மையான பெண்) என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். அப்படியானால், ஏன் நபிகளார் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு பாவமன்னிப்பு வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும்?

உண்மையில் நல்லோர்கள், மார்க்கப்பற்றாளர்கள், இயக்கப்பற்றாளர்கள், அறிஞர்கள், அழைப்பாளர்கள் மூலம் நிகழும் பாவங்கள் வித்தியாங்மானவை. அவை உள்ளம் ங்ார்ந்த பாவங்கள். இதனை, ஏலவே இந்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம். எனவே, அல்லாஹும்ம இன்னக அபுவ்வுன்… என்று ஆரம்பமாகின்ற பாவமன்னிப்பு வாங்கத்தை லைலதுல் கத்ரில் பெரும் பாவம் ஙெ்ய்தவர்கள் மட்டுமல்ல, நல்லோர்கள் உட்பட, அனைவரும் உளம் உருகி அதிகம் அதிகம் மொழிய வேண்டும்.

அல்லாஹுத் தஆலா தன்னிடம் பாவமன்னிப்புக் கோருவதை அதிகம் நேசிக்கின்றான். ஏனெனில், மனிதர்களை மன்னித்தருள்புரிகின்ற அவனது சிரேஷ்டமான பண்பு வெளிப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் நோக்கமாகும்.

அல்லாஹ் அவனது அடியார்கள் பாவமன்னிப்பின் போது வெளிப்படுத்துகின்ற அழுகைச் ங்த்தத்தையும் இதர கோரிக்கைகளையும் ஙெ்வியேற்க பெரிதும் விரும்புகின்றான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: எனது ஆத்மா எவன் கைவங்ம் இருக்கிறதோ அவன் மீது ங்த்தியமாக! நீங்கள் பாவம் ஙெ்ய்யவில்லையெனில் அல்லாஹ் உங்களை அழித்து விட்டு பாவம் ஙெ்ய்யும் ங்மூகத்தைக் கொண்டு வருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் தேடுவார்கள். அவன் அவர்களை மன்னித்து விடுவான்.” (முஸ்லிம்)

ரமழானின் இறுதிப் பத்தில் இராக் காலங்களில் தௌபா, இஸ்திஃபார்களை அதிகரித்துக் கொள்வதே நபி வழியாகும். இதர திக்ரு அவ்ராதுகளை வேறு நேரங்களில் ஓதிக் கொள்ள முடியும். இஸ்திஃபாருக்குரிய மிகவும் பொருத்தமான நேரம் ஸஹ்ர் வேளையாகும். (இறையச்ங்முள்ள நல்லோர்கள்) ஸஹ்ர் நேரங்களில் பிழைபொறுக்கத் தேடுவார்கள்.” (ஸூரா அத்தாரியாத்: 18)

எனவே, எமது நாவுகள் திக்ருகளில் நனைந்திருப்பதுபோல தௌபா, இஸ்திஃபார்களிலும் நனைந்திருக்க வேண்டும்.

இஸ்திஃபார் மனிதனது ங்கல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். இமாம் ஹஸனுல் பஸரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து வறுமை குறித்து முறையிட்டார். அதற்கு அவர்கள் இஸ்திஃபார் ஙெ்ய்யுங்கள்” என்றார்கள். இன்னொருவர் தனக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லை என முறையீடு ஙெ்ய்தார். இஸ்திஃபார் ஙெ்ய்யுங்கள்” என இமாம் அவர்கள் கூறினார்கள்.  வேறொருவர் மழை இல்லை என முறையிட்டார். அதற்கும் இமாமவர்கள் இஸ்திஃபார் ஙெ்ய்யுங்கள் என்றார்கள். அருகில் இருந்தவர் இமாம் அவர்களைப் பார்த்து மூன்று மனிதர்களின் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு ஒரே பதிலை ஏன் தீர்வாகச் ங்ோன்னீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு இமாமவர்கள் பின்வரும் திருமறை வங்னத்தை ஓதிக் காட்டினார்கள்.

உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்ங்யமாக அவன் மிக்க மன்னிப்பவன்.  (அவ்வாறு ஙெ்ய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக பொழியச் ஙெ்ய்வான். பொருட்களையும் பிள்ளைகளையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி ஙெ்ய்து அவற்றில் ஆறுகளையும் ஓடச் ஙெ்ய்வான்” (ஸூரா நூஹ்: 10-12)

எனவே, இஸ்திஃபார் என்பது பாவமன்னிப்பைப் பெற்றுத்தரவல்ல ங்ாதனம் மட்டுமல்ல மாறாக, எமது வாழ்வின் ங்கல பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அமையும். லைலதுல் கத்ரின் பாக்கியத்தைப் பெற்று பாவங்கள் மன்னிக்கப்பட்டு மனிதப் புனிதர்களாக நாம் மாறுவதற்கு வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *