General Knowledge Politics

துருக்கி: புதிய திருத்தங்களும் தேசிய மற்றும் பிராந்திய தாக்கங்களும்

துருக்கி:

புதிய திருத்தங்களும் தேசிய மற்றும் பிராந்திய தாக்கங்களும்

நிரைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முரையை அறிமுகம் செய்வதற்கான வாக்கெடுப்பில் ஆளும் தரப்பு 51 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளன.முழு மொத்தப் பார்வையில் மாற்ரத்தை ஆதரிக்கும் நீதிக்கும் அபிவிருக்திக்குமான கட்சிக்கு சார்பாக தேர்தல் முடிவுகள அமைந்த போதிலும்கூட, சில முக்கியமான அவதானங்களை அம்முடிவுகள் சுட்டிக் காட்டுவதனை புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, அங்காரா, இஸ்மீர், இஸ்தான்பூல், தியாபகா போன்ர துருக்கியின் இராஜதந்திர பருமன் கூடிய நகரங்கள் அரசியல் சீர்திருத்தங்களுக்கு எதிராகவே வாக்களித்துள்ளன. துருக்கியினுடைய மதச்சார்பற்ரவாதத்தின் கடைசிக் கோட்டை என இஸ்மீரை அழைக்கலாம். எனவே, மதவிழுமியங்களுடன் உடன்பட்டு செல்லும் நீதிக்கும், அபிவிருக்திக்குமான கட்சியின் முன்மொழிவுகளை இஸ்மீர் எதிர்த்து நின்ரமை அதிர்ச்சியளிக்கும் விடயமல்ல. மறுபுரம், எத்தேர்தல்களிலும் கடுமையான போட்டித் தன்மை கொண்ட நகரமாக அங்காராவை கருத முடியும். நாட்டின் நிர்வாக, அரசியல் தலைநகரம் என்ர வகையில் ஆளும் கட்சி அதில் தோல்வியடைந்தமை ஆழமான அரசியல் அர்த்தங்களை உணர்த்தக் கூடியது.

அதேபோன்று, இஸ்தான்பூலை சிறிய துருக்கி என அழைப்பதுண்டு. காரணம், அது கொண்டுள்ள பன்மைத்துவம், ஜனத் தொகை, அடையாள முக்கியத்தும் என்பவற்றுடன் மொத்த துருக்கிய வாக்காளர்களில் ஜந்தில் ஒரு பகுதியினரை இஸ்தான்பூல் கொண்டிருக்கிரது. என்ராலும்கூட, இஸ்தான்பூல் நகரின் தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு எதிராகவே அமைந்தன. அதிலும் ஆளும் கட்சியின் கோட்டைகளாக கருதப்படும் அயுப், பாதிஹ், உஸ்குதார் ஆகிய மாவட்டங்களில் கடும் போட்டியுடன் கூடிய தோல்வியை ஆளும் தரப்பு சந்தித்துள்ளது. குர்துகள் பெரும்பான்மையாக வாழும் தியாபகர் நகரம் பெரியளவு வாக்கு வித்தியாசத்தில் அரசியல் யாப்பு மாற்ரங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளது. இத்தேர்தல்களில் ஆளும் தரப்பும், தேசியவாத கட்சியும் இணைந்தே களத்தில் குதித்தன. மொத்தத்தில், ஆளும் கட்சியின் 50 வீதமான வாக்குகள் மற்றும் தேசியவாதக் கட்சியின் 15 வீதமான வாக்குகள் என்ர அடிப்படையில் மொத்தமாக 65 வீதமான வாக்குகளுடனேயே களத்தில் குதித்தது. ஆனால், 51 வீதமான வாக்குகளையே மாற்ரங்களை ஆதரிக்கும் தரப்பால் பெர முடிந்தது. இன்னும், துருக்கியின் பல நகரங்களில் வாழும் குர்து முஸ்லிம்களது வாக்குகளே ஆளும் கட்சியின் வெற்றியை உறுதி செய்தமையும் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் மற்ரொரு கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய அவதானமாகும்.

மேற்சொன்ன தரவுகள் எதுவும் ஆளும் கட்சியின் வெற்றியின் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்குட்படுத்த மாட்டாது. ஏனெனில், இறுதியில் ஆளும் கட்சியே பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிருக்கிரது. ஆனால், ஆளும் கட்சியின் வெற்றி உளவியலை சோதிக்கக் கூடிய முடிவுகள் அவை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். என்ராலும்,தேர்தல் முடிவுகளை ஒட்டு மொத்தமாக தொகுத்து நோக்கும் போது பஹ்மி ஹுவைதி கூறுவது போல் தோல்வியின் சுவையை அனுபவித்த வெற்றி” எனச் சொல்ல முடியும். மேலும், அர்துகான் என்ர அரசியல் ஆளுமையின் மீதான மக்கள் நம்பிக்கையே வெற்றியை ஆளும் தரப்புக்கு பெற்றுக் கொடுத்திருக்கிரது என்பதும் முடிவுகள் அமைதியாக கூர வரும் செய்தியாகும்.

1924 மற்றும் 1946ஆம் ஆண்டுகள் துருக்கியுடைய அரசியல் வரலாற்றில் பிரதான மைற்கற்களாகும். முதலாவது, உஸ்மானிய சாம்ராஜ்ஜியம் ஒழிக்கப்பட்டு குடியரசாக துருக்கி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டாகும். இரண்டாவது, முதல் முரையாக பல கட்சி அரசியல் கட்டமைப்பு அங்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த இரண்டு ஆண்டுகளும் இணைந்தே நவீன துருக்கியின்” அடிப்படைப் பண்புகளை தோற்றுவித்தது.மதச்சார்பற்ர சிந்தனையும், துருக்கியத் தேசியவாதத்தையும் முதன்மைப்படுத்தல், சர்வதேச தலையீடுகளிருந்து தவிர்ந்து கொள்ளல் மற்றும் இஸ்லாமிய நாகரிகத்துடன் தொடர்புகளை அறுத்துக் கொள்ளல் என்பனவாகும். இம்மூன்று பண்புகளுமே 1924 முதல் 1946 வரையான ஒரு கட்சி ஆட்சியையும் 1946 முதல் 2017 வரையான பல கட்சி அரசியல் ஒழுங்கையும் கட்டுப்படுத்தி வந்தன.  அதற்குப்பால், அவையே துருக்கியின் அரசியல் கலாசாரத்தையும், அதன் கருப்பொருள்களையும், கட்சிகளது உளவியலையும், முன்னுரிமைகளையும், சர்வதேச உரவையும் முகாமை செய்து வந்தனஎன்றும் கூரலாம். பொதுவாக 2007 முதல் 2017 வரையான காலப்பிரிவில் துருக்கியின் உள்ளக அரசியல் விவாதங்களை தீர்மானிப்பதில் மேற்கூரப்பட்ட பண்புகள் பெயரிளவில்” பொதுக் குறிகாட்டிகளாக கருதப்பட்டன.

ஆனால், புதிய அரசியல் சீர்திருத்தங்களுடன் நவீன துருக்கியை வடிவமைத்த பண்புகளிலிருந்து சட்டபுர்வமாக விடுபடுவதற்கான அனுமதி ஆளும் கட்சிக்கு கிடைத்து விட்டது.  விளைவாக, இதுவரை துருக்கியின் அரசியல் விவாதங்களை தீர்மானித்த  கட்சிகளது கருத்தியல் பின்புலம் (ஐஞீஞுணிடூணிஞ்டிஞிச்டூடூதூ ஞிஞுணணாஞுணூஞுஞீ ணீணிடூடிணாடிஞிச்டூ ஞிதடூணாதணூஞு) என்பதற்கு பகரமாக ஜனாதிபதியின் கொள்கைகள், அவரது தேசிய நிகழ்ச்சி நிரல்களைமையப்படுத்திய உரையாடல்கள் ஆரம்பிக்கலாம். துருக்கி மக்களின் அரசியல் தெரிவுகளில், நோக்குகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மக்களின் அரசியல் தெரிவுகளில் கருத்தியல் சார்பியம் நீக்கம் செய்யப்படும் பட்சத்தில், நாட்டின் கொள்கைத் தீர்மானங்கள், முன்னுரிமைகள் மற்றும் தேசிய பேசுபொருகளில் நியாயமான மாற்ரங்களை அது ஏற்படுத்தலாம். ஒரு விதத்தில் தேர்தல் முடிவுகள் மக்களை பிளவுபடுத்திய போல காட்சிப்படுத்தினாலும், இத்தேர்தல் ஏற்படுத்தப் போகும் அரசியல் கலாசாரம் சார்ந்த மாற்ரங்கள் மதச்சார்பற்ரவாதம்” தேசியவாதம்” இஸ்லாமியவாதம்” என்ர குறுகிய வட்டத்தில் சிந்திக்கும் சுழமையை மாற்றியமைக்கும் உள்ளீடுகளைக் கொண்டவை. முழு மொத்தத்தில், இத்தேர்தலுடன் துருக்கியின் அரசியல் கட்டமைப்பு ஆணிஞீதூ ணீணிடூடிணாடிஞிண்” முழுமையான மீள்ஒழுங்குபடுத்தலுக்கு உட்படப் போகிரது எனலாம்.

மறுபுரம், புதிய சட்டசீர்திருத்தங்கள் பிராந்திய அரசியல் மற்றும் துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கையில் எந்தளவு தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதும் மிக முக்கியமான ஆய்வுப் பொருளாகும். இந்தப் பின்புலத்தில், ஐரோப்பிய யூனியனுடனான உரவுகள், சிரிய விவகாரம் மற்றும் குர்துகளது பிரச்சினை என்பன இவ்விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்ரன. இதுவரை காலமும் ஐரோப்பிய யுனியனுடைய கொள்கைகளையும், ஆளும் கட்சியின் அரசியல் தீர்மானங்களையும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை. காரணம், குறித்த ஐரோப்பிய யுனியனில் அங்காரா இணையும் செயற்திட்டத்தை ஐரோப்பாவின் நோக்கிய விதமும்,  துருக்கியின் ஆளும் கட்சியின் எதிர்பார்புகளும் ஒன்ராக அமையவில்லை. 1963 களில் மேற்குலக நாகரிகம், விழுமியங்களுடன் ஆத்மார்த்த உரவைப் பேணல் என்ர கமாலிஸ கோட்பாட்டின் விளைவாகவே ஐரோப்பிய யூனியன்” இணைவு என்ர சிந்தனை துருக்கியில் தளிர் விட்டது. ஆனால், சட்டபூர்வமாக கமாலிஸ பண்பாட்டுப் பாரியம்பரியத்திலிருந்து ஆளும் கட்சி புதிய யாப்புத் திருத்தங்களுக்கு ஊடாக தன்னை விடுவித்துக் கொணடுள்ளது. எனவே,  ஐரோப்பிய யூனியனுடனான உரவுகள் முன்மாதிரியை பின்பற்ரல்” என்ர அடிப்படையில் இன்றி பரஸ்பர நலன்களை” மையப்படுத்தியதாகவே இனி அமையக் கூடும்.

அதேபோன்று, குர்துகள் விவகாரம், அமெரிக்காவுடனான உரவுகள் மற்றும் மத்திய கிழக்கிற்கான அகன்ர இராஜதந்திரம் போன்ரன நேரடியாக புதிய சட்ட சீர்திருத்தங்களால் தாக்கமுரப் போவதில்லை. ஏனெனில், ஏற்கனவே ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலேயே மேற்சொன்ன விவகாரங்கள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் காணப்படுகின்ரன. குர்திஷ் தொழிளாளர் கட்சி மற்றும் அதன் சிரியக் கிளையை வலுவுட்டும்  சுயாட்சிக்கான நகர்வுகளை தடுத்தல், சிரியாவின் உள்ளக அரசியல் பொறிமுரையில் தெஹ்ரானின் செல்வாக்கை கட்டுப்படுத்தல் மற்றும் ஸூன்னி உலகின் சக்தி வள நாடுகளுடனான இராஜதந்திர உரவுகளை பலப்படுத்தல் என்பனவே ஆளும் கட்சியின் வெளிநாட்டுக் கொள்கை தற்போதைய முன்னுரிமைகளாகும்.எப்படி இம்மூன்று முன்னுரிமைகளுடன்  பிராந்திய , சர்வதேச நாடுகளது கொள்கைகள் தொழிற்படுகின்ரன ? என்பதே ஆளும் கட்சியின் வெளிநாட்டுக் கொள்கையின் போக்குகளை தீர்மானிப்பதாக அமையும். அதாவது,கிட்டிய எதிர்காலத்தில் வெளிநாட்டுக் கொள்கை முன்னுரிமைகளில் பாரிய தாக்கத்தை புதிய அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப் போவதில்லை என ஊகிக்கலாம்.

இறுதியாக, ஓட்டு மொத்தமாக நிரைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முரையின் நீண்ட காலத் தாக்கங்கள் தொடர்பான விவாதங்களில் பங்கொள்ளும்  இரு தரப்பினரதும் கருத்துக்களிலும் நியாயங்கள் இருக்கவே செய்கின்ரன. சிலர் துருக்கியின் ஜனாநாயகத்தினுடைய எதிர்காலத்தை மையப்படுத்தி சிந்திக்கின்ரனர். இத்தகையவர்கள் நிரைவேற்று ஜனாதிபதி முரையை” நோக்கி துருக்கி நகர்வதற்கான பொருத்தமான சுழமையை இன்னும்  அடையவில்லை என மதிப்பிடுகின்ரனர். மறுபுரம், அகன்ர முஸ்லிம் உலகினை திசைப்படுத்துவதில் துருக்கியின் புவியியல், இராஜதந்திர முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு நிரைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முரையை” ஆதரிக்கின்ரனர். ஆனால், இறுதியாக ஒன்ரைப் புரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்ர முரையோ அல்லது ஜனாதிபதி முரையோ தன்னளவில் எதனையும் சாதித்துவிடப் போவதில்லை. ஆளும் கட்சியின் முகாமைத்துவ ஆளுமையிலேயே” விளைவுகள் தங்கியுள்ளன. நாட்டின் ஸ்தீரத்தன்மையும், பொருளாதார மேம்பாடும் அரசியல் கட்டமைப்பை விட, ஆட்சிபுரிதல் வினைதிரனின் மீதே தங்கியுள்ளது. இந்தப் பின்னணியில், ஜனாதிபதி முரையின் கீழ் ஆளும்  நீதிக்கும் அபிவிருக்திக்குமான கட்சியின் ஆட்சிபுரிதல் செயற்பாடுகளும், இலக்கை நோக்கிய பிரயத்தனங்களும் எப்படி அமையப் போகிரது என்பதனை நிதானமாக அவதானிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *