Muamalath Spiritual Upliftment

பிள்ளைகளுடன் நட்புக் கொள்ளுங்கள்!

பிள்ளைகளுடன் நட்புக் கொள்ளுங்கள்!

கலாநிதி: ஸமீர் யூனுஸ்

தமில்: பர்ஹான் மன்ஸூர்

ஒரு பழைய கதை இருக்கிறது. சிறிய கிராமம் ஒன்றில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது வீட்டின் ஓரமாக ஒரு புற்றிருந்தது. அதில் ஒரு பாம்பு வசித்து வந்தது. தனது வீட்டிற்கருகில் பாம்பு வசிப்பதையிட்டு அம்மனிதன் சந்தோஷமடைந்தான். காரணம், அந்தப் பாம்பு நாளாந்தம் ஒரு தங்க முட்டையிட்டது. அவன் அந்த முட்டையை கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்தான். ஒருநாள் புற்றிலிருந்து வெளியேறிய பாம்பு அவனது பால் தரும் மாட்டை தீண்டி கொன்று விட்டது. அதனைக் கண்ட அவனும் அவனது மனைவியும் மாட்டை விட பாம்பு அதிக இலாபம் ஈட்டித் தருகிறது. ஆகவே, இவ்விடயத்தை அலட்டிக் கொள்ள தேவையில்லை என முடிவு செய்தனர்.

நாட்கள் கழிந்தன. புற்றிலிருந்து வெளியேறிய பாம்பு அவர்களின் குடும்ப வாகனமான கழுதையை கொன்று விட்டது. ஆனால், அக்கணவனும் அவனது மனைவியும் பாம்பை அடித்துக் கொல்ல நினைக்கவில்லை. காரணம் என்னவெனில், கழுதையால் வரும் வருமானத்தைவிட பாம்பினால் அதிக வருவாய் கிடைத்தது. இரண்டு வருடம் கழித்து அப்பாம்பு வீட்டு வேலைக்காரனைக் அவனையும் கொன்று விட்டது. அதை நினைத்து அவர்கள் கவலைப்பட்ட போதிலும்கூட சில நாட்களிலேயே அதை மறந்து விட்டார்கள். சில நாட்களின் பின் அந்தப் பாம்பு அவர்களது பிள்ளையைத் தீண்டியது. அப்போது அந்தப் பாம்பை கொல்ல முயற்சி செய்தனர் பெற்றோர். பாம்பு ஓடி ஒளிந்து விட்டது.

நாட்கள் நகர்ந்தன. அம்மனிதனின் கையிலிருந்த பணம் நிறைவடைந்தது. வேறு வழியின்றி பாம்பை தேடியலைந்தான். பழைய நிகழ்வுகள் அனைத்தையும் மறந்து பாம்பை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தான். மீண்டும் தங்க முட்டையிட ஆரம்பித்தது பாம்பு. சில வருடங்கள் கழித்து அவனும் மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் இருவரையும் தீண்டிக் கொன்று விட்டது.

சில பெற்றோர் அம்மனிதனைப் போன்று இருக்கின்றனர். பணத்துக்காக குழந்தைகளை பலிகொடுத்து விடுகின்றனர். பணத்துக்காக, உலக ஆசைக்காக எமது குழந்தைச் செல்வங்களை கவனிக்காது விட்டு விடுவது அவர்கள் எங்களை விட்டும் தூரமாகிச் செல்ல வழியேற்பட்டு விடும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ங்ம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் நாம் சமகாலத்தில் அவர்கள் தவறான பாதையில் செல்வதை உணர்ந்து கொள்வதில்லை. சில பிள்ளைகள் பெரியவர்களான பின் தமது பெற்றோரை மதிப்பதில்லை. அதற்குக் காரணம், சிறுவயது முதலே பெற்றோரை மதிக்க வேண்டிய முறை பற்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை.

பெற்றோரை மதிப்பது, மூத்தோருக்கு மரியாதை செய்வது, ஆசிரியர்களை கண்ணியப்படுத்துவது முதலான விடயங்களை அவர்களது உள்ளங்களில் விதைக்க வேண்டும். நாம் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். நாம் பணத்தின் பின்னால் அலைந்து திரிந்து கடைசியில் பணத்திற்காக பாம்பு வளர்த்த கதையாக எமது கதை ஆகி விடுகிறது. எமது பிள்ளைகளுடன் நட்புக் கொள்வதும் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து பழகுவதற்கு வழிவகுப்பதும் எமது பொறுப்புகளாகும். இருக்கிறது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள். ஒரு மனிதன் அவனது நண்பனின் மார்க்கத்தில் இருக்கிறான். ஒரு மனிதனைப் பற்றி அறிய வேண்டுமானால் அவனது நண்பனைப் பார்த்துக் கொள்ளுங்கள்.” (அஹ்மத், அபூதாவூத்)

நட்பின் விளைவுகள்

 1. நாம் எமது பிள்ளைகளுடன் நட்புக் கொள்வதன் மூலமாக அவர்களுக்கு பாதுகாப்புணர்வு ஏற்படுகிறது. என்னுடன் எப்போதும் எனது பெற்றோர்கள் இருப்பார்கள்” என்ற நம்பிக்கை பிறக்கிறது. பிரச்சினைகள் ஏற்படின், பெற்றோரின் உதவியுடன் அதை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள்.
 2. குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல பண்பாடுகளை சொல்லிக் கொடுத்து வளர்க்க முடியுமாகிறது. பெற்றோரிடமிருந்து நல்ல அனுபவங்களை பிள்ளைகள் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இது பிள்ளையின் பண்பாட்டு விருத்திக்கு காரணமாக அமைகிறது.
 3. பிள்ளைகளுடன் நட்புக் கொள்வதன் மூலமாக வழிபிறழ்வதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க முடியும். பிள்ளைகளுடன் நெருங்கிப் பழகும்போது இரு தரப்புக்குமிடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படுகிறது.
 4. பெற்றோர்- பிள்ளைகளுக்கிடையிலான நெருக்கமான தொடர்பு மூலமாக ஒரு நல்ல குடும்பம் உருவாக வழியேற்படுகிறது. அவர்களுக்கு மத்தியில் அன்பு, இரக்கம், விட்டுக்கொடுப்பு, பரஸ்பர புரிந்துணர்வு… காணப்படும். இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்களைவிட தனது குடும்பத்தவர்களுடன் அன்பாக நடக்கும் எந்தவொரு மனிதனையும் நான் காணவில்லை.” (ஸஹீஹ் முஸ்லிம்)
 5. பெற்றோர்- பிள்ளை நட்பு மூலமாக அவர்களுக்கு மத்தியில் ஆக்கபூர்வமான உரையாடல் கட்டியெழுப்பப்படும். அங்கு பிள்ளைகளுக்கு கருத்து சொல்ல இடமளிக்கப்படும். இவ்வாறு நடப்பதனூடாக பிள்ளைகள் ஒதுக்கப்பட மாட்டார்கள். அக்குடும்பத்தில் கலந்துரையாடல் மூலம் முடிவுகள் பெறப்படும். பிள்ளைகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்படும். பெற்றோராகிய நாமனைவரும் ஸூரா ஆலு இம்ரானின் 159 ஆவது வசனம் சொல்லும் கருத்தை சரிவரப் புரிந்து பிள்ளை வளர்ப்பில் கரிங்னை ஙெ்லுத்த கடமைப்பட்டுள்ளோம்.

நட்புக் கொள்வதிலுள்ள தடைகள்

பிள்ளைகளுடன் கடுமையாக நடத்தல், அவர்களைத் தூற்றுதல், பரிகாசம் செய்தல், எச்சரித்தல், தப்பெண்ணம் கொள்ளல் போன்றவை பிள்ளைகளிடமிருந்து எம்மை தூரமாக்கி விடும். இவ்வாறான விடயங்கள் பிள்ளைகளுடன் நட்புக் கொள்வதற்கு தடையாக அமையும் காரணிகளாகும். பெற்றோராகிய நாம் எமது பிள்ளைகளோடு அன்பாக பேச வேண்டும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் இரக்கமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் அமர்ந்து உரையாட வேண்டும். அவர்களுடன் சேர்ந்து விளையாட  வேண்டும். வெற்றிகளின்போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். தோல்விகளின்போது ஆறுதல் கூறி அமைதிப்படுத்த வேண்டும். இவை எமது வாழ்வில் பின்பற்றப்படாமையின் காரணமாக பிள்ளைகளுடனான நட்பில் விரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, கட்டிளமைப் பருவத்திலுள்ள பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இப்பருவத்தில்  பெற்றோர் மிக நெருக்கமாக நடந்து கொள்வதோடு உற்ற நண்பனைப் போன்று செயற்பட வேண்டும். ஒரு பொலிஸ்காரனைப் போல் நடந்து கொள்வதனூடாக ஒருபோதும் நட்பை வளர்க்க முடியாது. கட்டிளமைப் பருவ வயதிலுள்ள பிள்ளைகளுடன் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது பற்றி பெற்றோர் அறிய வேண்டிய தேவை இருக்கிறது. இது ஓர் உணர்ச்சிமிக்க பருவமாகும். நாம் விடும் சிறு தவறு பிள்ளை எம்முடன் நெருங்கி வருவதைத் தடுத்து விடும்.

பிள்ளைகளுடன் நட்புக் கொள்வது எவ்வாறு?

எமது பிள்ளைகள் வழிதவறிவிடக் கூடாது என்றே நாமனைவரும் விரும்புகிறோம். ஆகவே, எமது பிள்ளைகளுக்காக நாம் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களுடன் நல்ல நட்பை பேணி இறுக்கமான தொடர்பை பேணுவது காலத்தின் தேவையாகும். இஸ்லாம் இவ்விடயத்தில் சிறந்த வழிகாட்டல்களை வழங்குகிறது. பிள்ளைகளுடன் நட்புக் கொள்ளும் விடயத்தில் நாம் பின்பற்ற வேண்டிய சில ஆலோசனைகளை இங்கு நோக்குவோம்.

 1. பிள்ளைகளுடன் நாம் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். உ+ ம்: (வாக்களித்திருந்தால் அதை உரிய நேரத்தில் நிறைவேற்றல்)
 2. அவர்கள் மீது அன்பு கொள்வதை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.
 3. அவர்களின் கருத்துக்களுக்கு நன்கு செவிசாய்ப்பதுடன் ஒரே வார்த்தையில் அவர்களது கருத்தை உடைத்து விடக் கூடாது.
 4. அவர்களை நம்புவதும் அவர்களது முயற்சியை ஊக்குவிப்பதும் அவர்களின் வெற்றியை கொண்டாடுவதும் தோல்வியின்போது ஆறுதல் சொல்வதும் கட்டாயமானதாகும்.
 5. அவர்களுடன் தனித்திருந்து பேசுதல். (ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களை அதற்காக ஒதுக்குதல் அல்லது வாரத்தில் சில மணிநேரங்களை ஒதுக்குதல்)
 6. அவர்கள் புத்தகம் வாசிக்கும்போது நாமும் சேர்ந்து வாசித்தல். அவர்கள் விளையாடும் போது சேர்ந்து விளையாடல்.
 7. அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சந்தோஷமான நிகழ்வுகள் பற்றி பேசீதல்.
 8. அவர்களுக்கு மார்க்கத்தை போதிப்பதில் கவனமெடுத்தல். (அகீதா, அஃலாக், ஸீரா)
 9. சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுக்கு தீர்மானமெடுக்க இடமளித்தல்.
 10. பாடசாலை விடயங்கள் பற்றி விசாரித்தல். (உதாரணம்: பயிற்சிக் கொப்பிகளை பார்வையிடல்)
 11. பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு உறவினர் வீடுகளுக்குச் செல்லல்.
 12. உங்கள் பிள்ளைகள் உங்களை நாடி ஏதாவது பேச வரும்போது அவர்களைப் புறக்கணித்து விட்டு உங்கள் வேலையில் மூழ்கி விட வேண்டாம்.
 13. பிள்ளைகளுக்கு எழுதிப் பழக, சித்திரம் வரைய, படிப்பதற்காக ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுத்தல்.
 14. உங்கள் பெற்றோர் உங்களில் பிரயோகித்த மோசமான வழிமுறைகளை உங்கள் பிள்ளையில் பிரயோகிக்க ஒருபோதும் நினைக்க வேண்டாம்.
 15. பிள்ளைகளிடம் எதிர்மறையாக (‡ச்ஞ்ச்ணாடிதிஞு) பேச வேண்டாம்; நேர்மறையாக (கணிண்டிணாடிதிஞு) பேசப் பழகிக் கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் செய்தது பிழை என்று கூறாமல் செய்து காட்டி ‘இவ்வாறு செய்வதே சரியானதாகும்’ என்று கூறுங்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *