Knowledge

ரமழானால் மகிழ்வுறும் இல்லம்

ரமழானால் மகிழ்வுறும் இல்லம்

-அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி)-

அதிபர், இஸ்லாஹிய்யா மகளிர் அரபுக் கல்லூரி, புத்தளம்

இரவு பகல் மாறி மாறி வருகின்ரன. அவை நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக உருண்டோடுகின்ரன. விளைவாக மீண்டும் ஓர் அருள்மிகு ரமழானை அடையும் பாக்கியத்தை அல்லாஹ் நாடியிருக்கிரான். இந்தக் கால மாற்ரங்களை அல்லாஹ் தன் திட்டத்தின் பிரகாரம் மேற்கொள்கிரான். அதனூடாக அவனது எதிர்பார்ப்பை   மிகத் தெளிவாக குறித்துக்காட் டுகிரான்.

அவனே இரவையும் பகலையும் ஒன்று மற்ரொன்ரைத் தொடர்ந்து வரக் கூடியதாக அமைத்தான். படிப்பினை பெர நாடும் அல்லது நன்றி உடையவனாக இருக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்காகவும்.” (ஸூரதுல் புர்கான்)

இரை உவப்பை, அவனது மன்னிப்பை, அருளை, நரக விடுதலையைப் பெறுவதற்காகவும் அவனுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்வதற்காகவுமே அல்லாஹ் கால மாற்ரத்தை ஏற்படுத்துகிரான்.

அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்ர அனைத்து வகையான அருள்களையும் பாக்கியங்களையும் அடைந்து கொள்வதற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரையிலான நன்மைகளை ஈட்டிக் கொள்வதற்குமான மிகச் சிரந்த காலம் ரமழான் மாதமாகும்.

இங்குதான்  சமூக  உருவாக்கத்தின்     முதல்  பள்ளிக்கூடமான  வீடு  கவனயீர்ப்பைப் பெறுகின்ரது. கண்ணியமிக்க ரமழான் எங்கள் வீடுகளில் பேரானந்தத்தை  அள்ளிக் கொட்ட வேண்டும். வான்மரையின் சுபசோபனங்களுக்கு தகுதியுள்ள வீடுகளாக மாற்ர வேண்டும். வணக்க  வழிபாடுகளிலும் இரைகட்டுப்பாட்டிலும் மனநிரைவு காணும் இல்லமாக எமது இல்லங்கள் திகழ வேண்டும்.

ரமழானின்  ஊடாக  மனநிரைவான  இல்லத்தை  உருவாக்க  சில  ஆலோசனைகளை முன்வைக்கின்ரோம்.

அல்குர்ஆன் இராகத்தால் இனிமையுறும் இல்லம்

ரமழான் அல்குர்ஆனின் மாதம். அல்குர்ஆனை ஓதுவதாலும் விளங்குவதாலும் மனிதன் மாண்புறுகிரான்; மேன்மையடைகிரான். ஒரு தனி மனிதனும் அவன் உருவாக்கும் இல்லமும் மனமகிழ்வை அனுபவிப்பதற்கும் பேரானந்தம் அடைவதற்கும் அல்குர்ஆனின் வழிகாட்டல் போதுமானது.

மனிதர்களே! உங்கள் இரைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிரது. இது இதயங்களில் உள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதாகவும் ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்ரது. (நபியே) நீர் கூறும் அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும்  அருளைக்  கொண்டும்  இதனை  இரக்கியுள்ளான்.  இதனைக்  குறித்து  மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்ரையும் விட இது சி ரந்ததாகும்.” (ஸூரா யூனூஸ்: 57- 58)

மகிழ்ச்சிகரமான இல்லத்தின் முதல்தர பண்பாக அல்குர்ஆனுடனான உரவு பலம் பெற்ரதாக அமைந்திருக்கும். அவ்வுரவை மேலும் பலப்படுத்துவதற்கான மிகச் சிரந்த வாய்ப்பே ரமழான்.

உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ரவர்கள் அல்குர்ஆனை இரைவனிடமிருந்து  தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதாக கருதினார்கள். எனவே, இரவில் அதனை ஆழ்ந்துணர்கின்ரவர்களாகவும் பகல் பொழுதில் அதனை   செயற்படுத்துகின்ரவர்களாகவும் இருந்தார்கள்” என்ர ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது கூற்றுக்கு ஏற்ப எமது சந்ததியை வழிநடத்துவதற்கான வாய்ப்பாக ரமழானைக் காண வேண்டும்.

சுவனத்தின் பூங்காவாக இல்லம்

நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பளிக்கும் இல்லமாக எங்கள் இல்லங்கள் திகழ வேண்டும். குடும்ப வாழ்வின் அடைவுகளில் இது மிகப் பிரதானமானது.

இரைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருளாகக் கூடிய  அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.” (ஸூரா அத்தஹ்ரீம்: 06)

ரமழான் சுவன வாயில் அகலத் திரக்கப்படும்   காலம்; நரக வாயில் இறுக மூடப்படும் காலம். இந்தக் காலத்தைப் பயன்படுத்தி  சுவன பாக்கியத்தைப்  பெறும் குடும்பமாக  எமது குடும்பத்தை உருவாக்க வேண்டும்.

குடும்பத்தார் பர்ளான, ஸுன்னத்தான   தொழுகைகளை பேணி தொழவும்   இரவு நேர தொழுகையில் ஈடுபடுவதற்கான   பயிற்றுவிப்பையும் ரமழானில் வழங்கலாம். எல்லா பொழுதுகளிலும் திக்ரிலும் இஸ்திஃபாரிலும் ஈடுபட தூண்ட முடியும்.

இரை அவதானத்திற்கு நாம் உட்படுகிரோம் என்பதை மிக அழகாக மனைவி மக்களுக்கு உணர்த்த முடியும். நிச்சயமாக கேள்வி, பார்வை, உள்ளம் அனைத்தும் மறுமையில் விச ாரணைக்கு உட்படும்” (அல்இஸ்ரா: 36) என்ர செய்தியை  உள்ளத்தின் ஆழத்தில்  பதிப்பிக்க முடியும்.

நன்மைகளை ஈட்டித் தரும் விடயங்களில் பிள்ளைகளிடத்தில்  போட்டியை ஏற்படுத்தல், நன்மைக்கும் தக்வாக்கும்  ஒவ்வொருவரும் மற்ரவருக்கு ஒத்துழைக்கும் நிலையை வீட்டில் தோற்றுவிக்க வாய்ப்புள்ள மாதம்தான் ரமழான்.

ஏழைகளின் தேவை அறிந்த இல்லம்

நாளாந்தம் பசியோடும் பட்டினியோடும் வாழும் மனிதர்களின் வலியை, வேதனையை உணர்த்துவதற்கான வாய்ப்பாக ரமழானை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தம்மிடமிருப்பவற்ரை பகிர்ந்து கொள்வதில் இன்பமும் இரை உவப்பும் இருக்கிரது.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிரார்கள்: நிச்சயமாக சுவனத்தில் ஓர் அரை இருக்கிரது. அதன் உட்புரமிருந்து  வெளிப்புரத்தையும் வெளிப்புரத்திலிருந்து   உட்புரத்தையும்   பார்க்க   முடியும்”  என   நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள். அப்போது யார் சிரந்த வார்த்தை உடையவராகவும் உணவளிப்பவராகவும் மக்கள் உரங்கும் இராப்பொழுதில் நின்று வணங்குபவராகவும் இருக்கிராரோ அவருக்குரியது” என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள். (அஹ்மத், அத்திர்மிதி)

பிரரது தேவைகளை நிரைவு செய்வதன் மூலம் நாம் நன்மை பெரலாம்; மகிழ்ச்சியடையலாம்; மனநிரைவு காணலாம்; இரையன்பையும் மக்கள் அன்பையும் வெல்லலாம் என்பதை உணர்ந்து, உணர்த்தி பயிற்றுவிப்பதற்கான போதுமான அவகாசத்தை   ரமழான் பெற்றுத் தருகிரது.

இரைவனிடம் மட்டுமே கையேந்தும் இல்லம்

பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்ர காலம்தான் ரமழான். அல்லாஹ் இக்காலத்தில் பிரார்த்திப்பதையும் தன்னிடம் தேவைகளை

கேட்பதையும்  அதிகம்  விரும்புகிரான்.  பிள்ளைகளுக்காக  பெற்ரோரும்  பெற்ரோருக்காக பிள்ளைகளும் பிரார்த்திக்கும் பண்பை வீட்டில் வளர்த்தெடுப்பதன் ஊடாக வீட்டின் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம்.

அபுஹுரைரா  (ரழியல்லாஹு  அன்ஹு)  அவர்கள்  அறிவிக்கிரார்கள்:  அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். துஆவை விட அல்லாஹ்விடத்தில் கண்ணியத்திற்குரிய மற்ரொன்று கிடையாது.” (அஹ்மத், அத்திர்மிதி)

துஆ  அல்லாஹ்வோடுள்ள  உரவை    வலுப்படுத்தும்;  தேவைகளை  அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்ர உயர்ந்த மானசீக பண்பை உருவாக்கும். விளைவாக கண்ணியமும் மரியாதையும் உத்தரவாதப்படுத்தப்படும்.

சிக்கனமுள்ள கருமித்தனமற்ர இல்லம்

ரமழான் மாதம் என்பது செலவினங்கள் அதிகரித்த மாதம் என்று தற்கால நடைமுரை செயற்பாடுகள் காட்டுகின்ரன. உண்மையில் ரமழான் சிக்கனத்தையும் தர்மத்தையும் வலியுறுத்துகின்ர  மாதம்.  வரவுக்கு  மிஞ்சிய  செலவினங்கள்  வாழ்க்கை  நெருக்கடிகளை

தோற்றுவிக்கும். வரவு அறிந்து, பிரர் தேவை புரிந்து செலவுகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான களமாகவே நாம் ரமழானை பயன்படுத்த வேண்டும். ஸஹர், இப்தார், பெருநாளுக்கான ஆடை அணிகள், ஏனைய ஏற்பாடுகள் எல்லாவற்றிலும் நடுநிலை போக்கை கையாள்வது அவசியமாகும். அதுவே அருளாளனின் அடியானின் பண்பாகும்.

மேலும், அவர்கள் செலவு செய்யும்போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாராக, அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.” (ஸூரதுல் புர்கான்: 67)

ரமழான் தரும் மாற்ரத்தை வரவேற்கும் இல்லம்!

ரமழான் மாற்ரத்தின் மாதம். வரலாறு நெடுகிலும் பல வெற்றிகளை ஈட்டிய மாதம். மாற்ரத் திற்கும் வெற்றிகளுக்குமுரிய மானசீக, பௌதிக காரணிகள், உள்ளார்ந்த, வெளிப்படையான அல்லாஹ்வின் அருள்கள்… என அனைத்தும் நிச்சயமாக இம்மாதத்தில் நிரைந்திருக்கின்ரன.

இவற்ரை கருத்திற்கொண்டு குடும்ப அங்கத்தவர்களைப் பயிற்றுவிப்பதற்கான செயற்திட்ட மொன்ரை அமைத்து நடைமுரைப்படுத்துவது குடும்ப வாழ்வில் புது அனுபவத்தையும் புத்தூ க்கத்தையும் ஏற்படுத்தும்.

மகிழ்ச்சிகரமான இல்லம் அமைவதற்கு ரமழான் பல வழிகாட்டல்களையும் பயிற்றுவிப்புக் களையும் தன்னகத்தே கொண்டிருக்கிரது. அவற்றுள் சிலவற்ரையே நாம் இங்கு சீட்டிக்காட்டினோம். இவற்ரோடு இன்னும் பல வழிகளையும் பயன்படுத்தி இல்லம் சிரக்க, செழிக்க முயற்சிப்போம், இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *