Fiqh Islamic Knowledge Knowledge

ஸகாதுல் பித்ர்: அசியா? பணமா?

ஸகாதுல் பித்ர்:

அசியா? பணமா?

 

ரமழான் மாதம் பல்வேறுபட்ட இபாதத் களை உள்ளடக்கியிருப்பது அதன் சிறப்பம்ச மாகும். அவற்றுள் மிக முக்கியமானதாக ஸகா துல் பித்ர் விளங்குகிறது.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பேரீத்தம் பழம், வாற்கோதுமை என்பற்றிலிருந்து ஒரு ஸாஃ அளவை முஸ்லிமான அடிமை, சுதந்தி ரமான அனைவர் மீதும் ஸகாதுல் பித்ராவாக விதியாக்கினார்கள். மக்கள் தொழுகைக்கு

வெளிப்பட்டு செல்வதற்கு முன்னர் நிறைவேற் றும்படி கட்டளையிட்டார்கள்.” (முத்தபக்குன் அலைஹி)

ஸாஃ என்பது நபிகளார் காலத்திலிருந்த ஒரு முகத்தல் அளவையாகும். நிறுத்தல் அளவையில் அதற்கு வேறுபட்ட நிறைகள் சொல்லப்டுகின்றன. அவற்றில் 2751 கிராம் என்ற ங்ஊதிய அளவுமுறை ஏற்புடையதாகும்.

ஸகாதுல் பித்ர் ஓர் இபாதத்  என்பதால் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள  பொருட்கள் மாத்திரமே கொடுக்கப்பட வேண்டும் என ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களும் இமாம்  அஹ்மத், இமாம் இப்னு ஹஸ்ம் ஆகியோரும் கூறுகின்றனர். அதற்கு பகரமாக வேறு பொருட்களையோ அதன் பணப் பெறுமதியோ கொடுப்பதனால் கடமை

நீங்கிவிட மாட்டாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களல்லாது அதன் பெறும தியை பணமாக கொடுக்க முடியும் என இமாம்களான உமர் இப்னு அப்துல் அஸீஸ், ஹஸனுல் பஸரி, ஸுப்யான் அஸ்ஸவ்ரி (ரஹிமஹுல்

லாஹ்) ஆகியோர் கூறுகின்றனர். ஹனபி மத்ஹ பினரும் இக்கருத்தையே கொண்டுள்ளனர். இமாம் புகாரியிடத்தி லும் இக்கருத்தே முதன்மை பெற்று விளங்கியது. ஸகாதுல் பித்ராவை பணமாக கொடுக்க முடியும் என்போர் பின்வ ரும் ஆதாரங்களை முன்வைக் கின்றனர்.

  1. ஸகாதுல் பித்ரின் நோக் கம், மேற்குறிப்பிட்ட பொருட்கள் மூலம்தான் அது நிறைவேற்றப் பட வேண்டும் என்பதல்ல. இன்னும் இப்பொருட்கள் மூலம்தான் அக்கடமை நிறைவேறும் என்பதுமல்ல. அதன் நோக்கம் ஏழைகளுக்கு உதவுவவதாகும். அவர்களை (ஏழைகளை) அத்தி னத்தில் தேவையற்றோராக ஆக் குங்கள்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் கூறப்பட்டதாக இமாம்

பைஹகீ பதிவு செய்துள்ளார். இந்த ஹதீஸ் பலவீனமானது என்று சொல்லப்படுகின்றது. இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும்  அதன் கருத்தை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் பிறிதொரு ஸஹீஹான ஹதீஸ் வந்துள்ளது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  ஸகாதுல் பித்ரை வீணான செயல், வார்த்தை  என்பவற்றால்  ஏற்பட்ட களங்கங்களில் இருந்து நோன்பாளியை சுத்தப் படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காக வும் கடமையாக்கினார்கள்.” (ஸுனன் அபீதாவூத்) பொருட்கள் வழங்கப்படுவதை விட பணம் வழங்கப்படுவதன் மூலம் ஏழைகளுக்கு தமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது கண்கூடு.

ஸகாத் விதியான பொருட்களில் ஸகாத்தை பெறாமல் அதன் பெறுமதிக்கு ஏற்ப வேறு பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸகாத் சேகரிப்போருக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் மூஆத் இப்னு ஜபல் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை ஸகாத் சேகரிப்பதற்காக யெமனுக்கு அனுப்பியவேளை முஆத் (ரழியல்லாஹு அன்ஹு) சோளம், வாற்கோதுமை என்பவற்றுக்கு பதிலாக பிடவைகளையும் ஆடைகளையும் கொண்டு வாருங்கள். அது உங்களுக்கு இலகுவாகவும் மதீனாவிலிருக்கும் நபித் தோழர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி) முஆத்

(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் இச்செயலை நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் மறுதலிக்க வில்லை. நபித்தோழர்கள் ஸகாத்துல் பித்ராக உணவுக்குப் பதிலாக திர்ஹம்களை வழங்குகின்ற நிலையில் அவர் களை அடைந்தேன்” என அபூ இஸ்ஹாக் கூறுகின்றார். (முஸன்னப் இப்னு அபீஷைபா)

அரபிகளிடத்தில் பணப் புழக்கம் மிக அரிதாக காணப் பட்ட நேரத்திலயே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் ஸகாத்துல் பித்ரை உணவுப் பொருட்களில் கடமையாக்கினார்கள். அன்று மக்களிடத்தில் அதிகமாக புழக்கத்திலும் இலகுவாகப் பறிமாறக் கூடியதாகவும் இருந்த பேரீத்தம் பழம், வாற்கோதுமை, காய்ந்த திராட்ங் பாலாடைக் கட்டி ஆகியவற்றை ஸகாத்துல் பித்ராவாக வழங்குவதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் அனுமதித்திருந்தார்கள். எடுப்பவருக்கும் கொடுப்பவருக்கும் இலகுவாக நாடும் வகையிலேயே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது கட்டளை அமைந்திருந்தது. இக்காலத்தில் பணத்தை பரிமாறிக் கொள்வதே மிகு இலகுவானது என்பது வெள்ளிடை மலையாகும்.

இக்காலத்தில் ஏழைகளுக்கு ஸகாதுல் பித்ராவாக அரிசி அல்லது வேறு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டாலும் அவர்கள் அவற்றை மலிவு விலையில் விற்பனை ஙெ்ய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அரிசியை மாத்திரம் வைத்துக் கொண்டு அவர்களால் அடிப்படைத் தேவைகளை நிறை

வேற்ற முடியாதுள்ளது. கறி மற்றும் ஆடைகள் வாங்குவதற்கு அவர்களுக்கு பணம் தேவைப்படுகின்றது. இதனைப் பயன்படுத்தி சில வியாபாரிகள் அவர்களிடமிருந்து அரிசியை அரை விரைக்கு வாங்குகின்றனர். இதனால் ஸகாத்துல் பித்ரின் உண்மையான பெறுமதி ஏழைகளுக்குச் ஙெ்ன்றடைவதில்லை. எனவே, இவற்றைக் கருத்திற் கொண்டு ஸகாத்துல் பித்ராவாக பணத்தை வழங்குவது சிறந்

தது என்ற முடிவை எட்ட முடியுமாக உள்ளது, அல்லாஹு அஃலாம்!

ஸகாத்துல் பித்ர் எப்பொழுது நிறைவேற்றப்பட வேண்டும்?

ரமழான் மாதம் நிறைவுற்று ஷவ்வால் மாதத் தலைப்பிறை கண்டது முதல் ஸகாத்துல் பித்ர் வழங்குவது கடமையாக மாறுகின்றது. பெருநாள் தொழுகைக்கு முன்னர் அக்கடமை நிறைவேற்றப்பட வேண்டும். யார் அதனை பெருநாள் தொழுகைக்கு முன் நிறைவேற்றுகின்றாரோ அது அதங்கீகரிக்கப்பட்ட ஸகாத்தாகும். யார் பொருநாள் தொழுகைக்குப் பின்னர் நறைவேற்றுகின்றாரோ அது ஸதகாக்களில் (தர்மங்களில்) ஒன்றாகவே இருக்கும்.”                                                         (இப்னு மாஜா)

பெருநாள் தினத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் அதனை வழங்குவதே சிறந்ததாகும். நபித் தோழர்களது வழிமுறை அவ்வாறே இருந்து வந்துள்ளது.

பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் நபித்

தோழர்கள் ஸகாத்துல் பித்ரை கொடுத்து வந்தனர்” என நாபிஃ அறிவிக்கின்றார்.         (ஸஹீஹுல் புகாரி)

ரமழான் மாத ஆரம்பம் முதலே அதனை வழங்க முடியும் என்பது ஷாபிஈ மத்ஹபின் கருத்தாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *