Aqeeda Islamic Knowledge Knowledge



Ãéüy[: ØïV^çï Öò©AÂïVª ¼ÃV«Vâ¦D

 

பலஸ்தீன் பூமி வெறும் ஒரு நிலமல்ல. அது கொள்கை வளர்ந்த பூமி. நபிமார்கள் பலரின் போராட்ட நிலம். முஸ்லிம்களது முதாலவது கிப்லா போலவே அது மூன்றாவது புனித பூமியும்கூட. அந்தப் புனித பூமி மிஃராஜ் நிகழ்வின்போது அல்லாஹ்வினால் இறுதி நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது காலத் தில் அது முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் கிறிஸ்தவர்கள் அந்த புனித பூமியை கைப்பற்றினார்கள். ஆனால், முஸ்லிம் கள் அதனை மீட்டெடுக்க போராடினார்கள். ஸலா ஹுத்தீன் அய்யூபியின் தலைமையில் அதனை மீட்டெடுத்தார்கள். காரணம் அது முஸ்லிம்க ளின் சொத்து.

அல்லாஹ்வால் இறைத்தூதர் (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு கையளிக்கப்பட்ட அந்த உயர்ந்த புனித பூமியை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். அதனை மீட்டெடுப்பது முஸ்லிம் சமூகத்தின் அடிப் படைக் கடமையாகும். இந்தப் பின்னணியில் தான் பலஸ்தீன் போராட்டம் நடைபெறுகின்றது. எனவே, இப்போராட்டம் பலஸ்தீன மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. அது முழு சர்வதேச முஸ்லிம்களினதும் போராட்டம். அது வெறும் மண்ணுக்கான போரட்டமல்ல. அது எமது கொள்கையின் இருப்புக்கான போராட்டம்.

யார்? என்ன செய்தாலும், எவர் கைகட்டி வாய்பொத்தி மௌனமாக இருந்தாலும் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்காக போராடுகின்றவர்கள் வெற்றி வாகை சுடியவர்களாகவே தெடர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும் உதவியும் என்றும் உண்டு.

எனது சமூகத்தின் ஒரு பிரிவினர் மார்க்கத்தின் மீது நிலைத்தவர்களாகவும் தமது எதிரிகளை மிகைத்தவர்களாகவும் தொடர்ந்திருப்பார்கள். கடும் துன்பம், அனர்த்தம் பீடித்தாலேயன்றி, அவர்களுடன் முரண்பட்டவர்கள் அவர்களுக்கு தீங்கிழைத்துவிட முடியாது. அவர்கள் அதே நிலையில் அல்லாஹ்வின் தீர்ப்பு வரும் வரைக்கும் நிலைத்திருப்பார்கள் என நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே அவர்கள் எங்கிருப்பார்கள்? எனக் கேட்கப்பட்டபோது அவர்கள் பைதுல் மக்திஸிலும் அதனைச் சூழவும் இருக்கின்றனர் என நவின்றார்கள்  (தபரானி

மற்றுமொரு அறிவிப்பில், எனது சமூகத்தின் ஒரு பிரிவினர் டமஸ்க ஸின் வாயில்களிலும் அதனைச் சூழவும், அல்லது பைதுல் மக்திஸின் வாயில்களிலும் அதனைச் சூழவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பர். அவர்களுக்கு உதவாமல் அவர்களைக் கைவிட்டவர்கள் அவர்களுக்கு தீங்கிழைத்துவிட முடியாது. அவர்கள் மறுமை வரைசத்தியத்தில் நிலைத்திருப்பார்கள் (அபூ யஃலா).

ஓர் ஹிஜ்ரத்துக்குப் பின் இன்னொரு ஹிஜ்ரத் இருக்கும். இந்த பூமிப் பந்தில் வாழும் சிறந்த மனிதர்கள் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர் கள் ஹிஜ்ரத் செய்த இடத்தை (பலஸ்தீன்) அண்டித்து வாழ்பவர்களாகும். இன்னும் பூமியில் அதன் மோசமானவர்கள் தொடர்ந்தும் இருந்து வருவார்கள். அவர்களது பூமிகள் அவர்களை உமிழ்ந்து விடும். அல்லாஹ் அவர்களை இழிவுப்படுத்துவான். மேலும் நரகம் அவர்களை குரங்குகளுட னும் பன்றிகளுடனும் ஒன்று சேர்க்கும். (அபூதாவூத், அஹ்மத், ஹாகிம், புகாரி, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளின்படி இது ஸஹீஹான ஹதீஸ் ஆகும். அல்பானி இதனை ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்).

ஹதீஸின் பொருள், மதீனா ஹிஜ்ரத்தின் பின் ஷாமுக்கான ஹிஜ்ரத் நடைபெறும். முஸ்லிம்கள் அதில் எதிரிகளை மிகைத்துக் கொண்டு தஜ்ஜாலுடன் இறுதிப் போர் புரியும் வரை நிலைத்து நின்று போராடுவார்கள்.

யூதர்கள் பல இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து அங்கு வந்து முஸ்லிம்களது பூமிகளை ஆக்கிரமிப்பார்கள். அல்லாஹ் இவ்வுல கிலும் மறுமையிலும் அவர்களை இழிவுபடுத்துவான்.

பலஸ்தீன் முழு உலக முஸ்லிம் சமூகத்தின் சொத்து. அதனைப் பாதுகாப்பது நமது ஈமானிய பொறுப்பு. இது நிலத்திற்கான போரட்டம் அன்று. இது ஒரு கொள்கைக்கான போராட்டம். அதனை மீட்டெடுக்கா மல் ஓய்வதில்லை என்பதே நமது மூச்சு. அதற்காக அர்ப்பணத்தோடு போராடும் குழுவினர் இறுதிவரைக்கும் வெற்றிவாகை சூடியவர்க ளாக திகழ்வார்கள் என்பதே இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறிய சுப செய்தியாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *